படிப்பில் பல்வேறு சாதனைகளை படைத்த திரையுலகின் முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள், திரைத்துறையிலும் தங்களது சாதனை முத்திரையை பதித்து வருகின்றனர்.

நடிப்பு ஆசை

பள்ளிப் பருவத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டுமே அது சாத்தியமாகும். சினிமாவில் இயக்குநராக வெற்றி பெறவேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கின்றன. வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் சினிமா வாய்ப்பை தேடி பலபேர் சென்னைக்கு வந்ததாக கூறுகின்றார்கள். நன்றாக படித்து இருந்தாலும், படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை செய்யாமல் சிலர் சினிமா கனவுகளுடன் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். சினிமா பின்புலம் உள்ளவர்களுக்கு அந்த கனவு எளிதில் நிறைவேறினாலும், சினிமா பின்னணி இல்லாதவர்கள் இதில் ஜெயிப்பதற்கு நீண்ட நாட்கள், ஏன் வருடங்கள் கூட ஆகின்றன. ஆனால் சிலர் சாதித்தும் காட்டி இருக்கின்றனர். பலருக்கு சினிமா ஒரு எட்டாக்கனியாகவே இருப்பதால் இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கும் சிலரைப் பற்றி நாம் இப்போது காண்போம்.

அமிஷா பட்டேல்

விஜய் நடிப்பில் உருவான புதிய கீதை படத்தில் நடித்திருந்தவர் அமீஷா பட்டேல். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அமீஷா, சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ட்ரெண்டான புகைப்படங்களையும், கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதில் வல்லவராயிருக்கிறார். பலரும் இவ்வளவு வயதாகியும் இன்னும் அழகாக இருக்கிறீர்களே என்று கமெண்ட்ஸ்களை போட்டு வருவர். எப்போதும் கவர்ச்சிக்கு குறை வைக்காமல் தன் ரசிகர்களுக்கு விருந்து வைத்துக்கொண்டே இருக்கும் நடிகை அமீஷா, பயோ டெக்னிக் பிரிவில் பொறியியல் முடித்தவர். அவர் தங்கப்பதக்கம் கூட பெற்று இருக்கிறாராம். அந்த அளவிற்கு புத்திசாலியானவர் அமிஷா.

டாப்ஸி

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்ஸி , காஞ்சனா-2, பிங்க், மிஷன் மங்கள் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜன கன மன படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மாடலிங்கை தனது வேலையாக செய்து வந்த இவர், மெல்லமெல்ல சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். பிறகு பாலிவுட்டிலும், தமிழிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்

சினிமா பின்புலம் இல்லாமல் வெற்றிகண்ட பல நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். டிவியில் தொகுப்பாளராக காலடி எடுத்துவைத்து, தற்போது முன்னணி நடிகராக தலைநிமிர்ந்து இருக்கிறார். மெரீனா படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்த சிவகார்த்திகேயன், பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். டிவியில் தொகுப்பாளராக இருக்கும் போதிலிருந்தே ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டவர். தற்போது வெளிவர தயாராக இருக்கும் டாக்டர் ‘படத்தை’ அடுத்து ‘அயலான்’ படத்தையும் தன் வசம் வைத்துள்ளார். இவரும் கம்ப்யூட்டர் சயின்ஸில் பிடெக் முடித்தவர். எம்பிஏவும் முடித்து நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

க்ரித்தி சனோன்

ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் க்ரித்தி சனோன். இவர் ஹிந்தியில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் படித்துள்ள இவர், டெல்லி ஐஐடியில் பிடெக் முடித்தார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த க்ரித்தி சனோனை திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அதனால் இவரும் ஒரு நடிகையாவே மாறினார்.

முன்னணி நடிகர்கள்

ஹிந்தியில் முன்னணி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கும், மும்பையில் ஆர்கிடெக்ட் பிரிவில் பொறியியல் படித்தவர் ஆவார். சமீபகாலமாகவே வளர்ந்து வரும் ஹீரோ, ஹீரோயின்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுவரும் நிலையில், இப்போது இளம் ஹீரோவான கார்த்திக் ஆர்யன் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளார். இவர் பயோடெக்னாலஜி பிரிவில் பொறியியல் முடித்தவர். கார்த்திக் ஆர்யன் தற்போது தோஸ்தானா 2 படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி படங்களில் அவ்வப்போது பல ஹிட் படங்களை கொடுப்பவர் தான் விக்கி கௌஷல், சஞ்சு படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இவர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பொறியியல் படித்தவர் ஆவார். நடிகர் சோனு சூட்க்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இவர், இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொது மக்களுக்கு பல உதவிகளை செய்து நல்ல பெயர் பெற்றுள்ளார். பார்ப்பதற்கு வில்லன் தோற்றத்தில் இருக்கும் இவர், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் படித்து முடித்தவர் ஆவார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்

ஜூன் 14 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புட், பள்ளிப்பருவத்தில் இருந்தே மிகவும் புத்திசாலியான மாணவர் ஆவார். இவர் டெல்லியில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் படித்து வந்தார். ஆனால் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமா வாய்ப்புக்காக தேடுதல் வேட்டையை தொடங்கினார். பல சீரியல்களிலும், தொகுப்பாளராகவும் வலம்வந்து வெற்றி நடைபோட்டு, பின்பு பல ஹிட் படங்களை கொடுத்து அனைவராலும் ஈர்க்கப்பட்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். சுஷாந்த் சிங் AIEEE நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 7வது ரேங்க் எடுத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மாதவன்

சாக்லேட் பாய் ஆகவும், பெண்களின் கனவு நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் மாதவன், ஐஐடியில் டெக்னாலஜி மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் படித்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே கனடா செல்ல scholarship பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு படிப்பிலும் கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார் நடிகர் மாதவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here