ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட’ என்ற முதல் பாடல் தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் தனுஷ் ஜூலை மாதம் 28ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஜூலை மாதம் முழுவதும் தனுஷின் பிறந்தநாள் மாதமாக கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். சந்தோஷ் நாராயணன் இசையில், ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்தப் படத்தில், தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் Game Of Thrones படத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்துள்ளார்.

தியேட்டரில்தான் ரிலீஸ்

மே1 ஆம் தேதி வெளியாக இருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் ‘கொரோனா’ பாதிப்பு காரணமாக தள்ளிப்போயுள்ளது. இந்த படம் முதலில் திரையரங்குகளில் வெளியான பின்னர்தான், ஓடிடி தளங்களில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தினர். ஜகமே தந்திரம் படம் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடனேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேறப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தில் இருந்து ‘ரகிட ரகிட’ என்ற முதல் பாடல் தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரெண்டிங்கில் ஜகமே தந்திரம்

‘ரகிட ரகிட’ என்ற முதல் பாடல் ஜுலை 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால, தனுஷ் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள், அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு, ஜகமே தந்திரம் திரைப்படத்தையும் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனிடையே, டுவிட்டரில் #JagameThandhiram என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here