மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கங்கனா ரணாவத்திற்கு பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேலி, கிண்டல்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டது பெருமளவில் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் உள்ள பெரிய ஆட்கள் அனைவரும் சேர்ந்து சுஷாந்தின் சினிமா வாய்ப்பை தட்டிப்பறித்ததால் அவர் மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சுஷாந்திற்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வரும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், பல அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். சுஷாந்த் திறமையான நடிகராக இருந்தும், அவருக்கு சினிமாத்துறையில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் பலரும் அவரை கேலி செய்ததுடன், மேடை நிகழ்ச்சிகளில் உதாசீனப்படுத்தியும், கேவலப்படுத்தியும் பார்த்தனர் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் வெற்றிப் படங்களை கொடுக்க துவங்கிய சுஷாந்த்தை பலரும் கார்னர் செய்ததாகவும் கங்கனா கூறி வருகிறார்.
அறிவியல் அறிவாளி
சுஷாந்த் சாதாரண நடிகர் மட்டுமல்லாமல், அவர் அறிவியலில் பெரும் அறிவாளி என்றும் அறிவியல் சார்ந்த பல விஷயங்களும் அவருக்கு தெரியும் என்றும் கூறிய கங்கனா, அவரது மரணம் குறித்து வெளிப்படையாக பேச தான் தயாராக இருப்பதாகவும் தெரிவிந்திருந்தார். படிப்பிலும் சிறந்து விளங்கி, அறிவியலிலும் பல திறமைகளை கொண்டுள்ள சுஷாந்த் சிங், எப்படி வீக்காக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததால் தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்று பலரும் கூறுகின்றனர். அப்படி சொல்வதற்கு அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என கங்கனா ரணாவத் பலவகையிலும் கேள்வி எழுப்பி இருந்தார்.
தகுதி இருக்கா?
தற்போது கங்கனா ரணாவத்துக்கு எதிராக பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் பொங்கி எழுந்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உயிருடன் இருக்கும்போது சுஷாந்த்தை பாதுகாக்காமல், அவர் மறைந்த பிறகு பப்ளிசிட்டி தேடுவதை போல அவருக்கு ஆதரவாக பேசினால் என்ன அர்த்தம்? என கங்கனாவிற்கு கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பியுள்ளார். முதலமைச்சராக நடிக்க உங்களுக்கு முதலில் தகுதி இருக்கிறதா? என்றும் பாலிவுட்டில் இருக்கும் பாலிடிக்ஸை மறைக்கவே உங்களை இந்தளவிற்கு தைரியமான பெண் கதாபாத்திரத்தில் அதுவும் முதல்வர் மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இது மறைந்த முதல்வருக்கு வெட்கக்கேடு என்றும் அவர் கூறியுள்ளார்.
வம்பில் சிக்கிய மீரா மிதுன்
மீரா மிதுனின் பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவரை பயங்கரமாக கிண்டலடித்து வருகின்றனர். பல அலும்பல்களை செய்து வரும் உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றும், எப்போதும் கவர்ச்சியாக இருக்கும் உங்களுக்கு அதுமட்டுமே செட்டாகும் எனவும் நெட்டிசன்கள் விளாசித் தள்ளியுள்ளனர். சுஷாந்த் மரணத்திற்கு பிரபல நடிகர்களான கரன் ஜோகர் மற்றும் சல்மான்கான் தான் காரணம் என்று பலரும் தெரிவித்து வரும் நிலையில், சல்மான் கானுக்கு ஆதரவாக டுவிட்டுகளை போட்டு, நெட்டிசன்களிடம் செமையாக மாட்டிக்கொண்டு தவிக்கிறார் மீரா மிதுன். கங்கனா ரணாவத்தின் ரசிகர்களும் தங்களது பங்கிற்கு மீரா மிதுனை பலவகையாக கலாய்த்து வருகின்றனர்.