சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்க படக்குழு திடமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘அண்ணாத்த’

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. ‘அண்ணாத்த’ திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு நடத்தப்படாததால், ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில், ‘அண்ணாத்த’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரஜினியின் பேட்ட, தர்பார் படங்கள் பொங்கல் தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப்போகும் படப்பிடிப்பு

‘அண்ணாத்த’ படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் படக்குழு உள்ளது. ஏனென்றால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்தால்தான், அதற்கு அடுத்த மூன்று மாதங்களில் இறுதிக்கட்ட பணிகளை முடித்து பொங்கல் தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்ய முடியும்.

சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா?

கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும் வரை படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டேன் என ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், அவர் இல்லாத காட்சிகளை படமாக்க படப்பிடிப்பு ஆரம்பமான பிறகு முடித்துவிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்சிரங்கள் இந்தப் படத்தில் நடிப்பதால், அனைவரையும் ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த வேண்டி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ‘அண்ணாத்த’ ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here