தேவையானவை
நாட்டுக்கோழி – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் -200 கிராம்
தக்காளி -2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி- தேவையான அளவு
பூண்டு – 15பல்
மிளகாய் பொடி – 20 கிராம்
சீரகத் தூள் -10 கிராம்
மிளகுத்தூள் -30 கிராம்
சோம்பு தூள் -10 கிராம்
கரம் மசாலா தூள் -10 கிராம்
நல்லெண்ணெய் -150 கிராம்
மல்லிதழை – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சியுடன் 7 பல் பூண்டு சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பின் குக்கரில் நல்லெண்ணெயை சேர்த்து சிறிது சூடானதும் கருவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து வதக்க வேண்டும். சிறிது நேரத்தில் பொன் நிறமாக மாறிய பின், இஞ்சிபூண்டு விழுது மற்றும் மீதமுள்ள 8 பல் பூண்டு, நறுக்கிய தக்காளி ஆகியவையை கலந்துவிட வேண்டும். அதன்பின் அனைத்து பொடிவகைகள், நாட்டுக்கோழி, உப்பு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் கலந்து 4 விசில் வந்தவுடன் இறக்கி வைத்து விடவும். பிறகு மல்லித் தழையை தூவி வறுவலான பின் எடுத்தால் சூடான, சுவையான நாட்டுக்கோழி பூண்டு வறுவல் தயார்.
நாட்டுக்கோழியின் பயன்கள்
எந்த அசைவ உணவிலும் இல்லாத உயர்ரக புரோட்டீன் நாட்டுக்கோழியில் உள்ளது. தசைகளுக்கு பலத்தைக் கொடுக்கக்கூடியது. நரம்புகளுக்கு வலு சேர்க்க கூடியது. சளி இருமலுக்கு சிறந்த உணவு.