ஷூட்டிங் ஸ்பாட் ஒன்றில் பைக் ஓட்ட தெரியாமல் தவறி கீழே விழுந்த நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷ்ரதா ஸ்ரீநாத்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார் நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத். காற்று வெளியிடை படத்தில் நடித்த இவர், விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்து வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆன விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷ்ரதா ஸ்ரீநாத். அந்தப்படத்தில் இடம்பெற்ற “யாஞ்சி.. யாஞ்சி” பாடல் பெருமளவு ஹிட்டானது. பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்தார்.

கெத்தான ரோல்

இந்த ஒரு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் வைத்து அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து தனக்கென ஒரு அந்தஸ்தை தமிழ் திரையுலகில் ஏற்படுத்திக்கொண்டார் ஷ்ரதா. தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் கெத்தான ரோலில் நடித்து போல்டான பெண்ணாக வரும் கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார். அவரது திறமையை காட்ட இந்த படம் ஒரு முக்கிய படமாக அவருக்கு அமைந்தது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தில் டாப்ஸி நடித்த அதே கதாபாத்திரத்தில் இவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் வெளியான இந்த படத்திற்கு நடிகை டாப்ஸிக்கு நல்ல பெயரையும், பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. அதேபோன்று நேர்கொண்ட பார்வை ஷ்ரதாவிற்கும் நல்ல பெயரையும், பாராட்டுகளையும் பெற்று தந்தது. தெலுங்கு திரையுலகில் நானி நடிப்பில் வெளியான ஜெஸ்ஸி படத்தில் நல்ல ரோலில் நடித்து பிரபலமானார்.

புகழும் ரசிகர்கள்

இவர் தற்போது ஆனந்தின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் சக்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு படத்தின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. மாதவனுக்கு ஜோடியாக விக்ரம் வேதா படத்தில் நடித்த ஷ்ரதாவிற்கு செம கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது என்று மாதவன் ரசிகர்களும் ஷ்ரதாவின் ரசிகர்களும் கூறி வந்தனர். அதனால் மாதவன் ரசிகர்களும் ஷ்ரதாவின் இன்ஸ்டா, டுவிட்டர் போன்ற இணையதளப்பக்கங்களை ஃபாலோ செய்தும் வருகின்றனர். இந்நிலையில் மாதவனுடன் மாறா என்ற படத்தில் மீண்டும் ஒருமுறை ஜோடி சேர்ந்துள்ளார் ஷர்தா. இப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மானின் சார்லி என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். சார்லி திரைப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது.

யாரும் கண்டுகொள்ளவில்லை

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நந்தி ஹில்ஸில் நடைபெற்ற ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் போல்டான கதாபாத்திரம் என்பதால் புல்லட் ஓட்ட தெரியுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு ஷ்ரதா எனக்கு ஓட்ட தெரியாது, ஆனால் முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் பைக் ஓட்டும்போது விழுந்த வீடியோவை, சமீபத்தில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சினிமா துறையில் போல்டான கேரக்டர் என்றாலே பைக் ஓட்ட வேண்டும் என்பது தலையெழுத்தாகவே அமைந்துவிட்டது. அதுதான் எனக்கும் நடந்தது என்று ஷர்தா பதிவிட்டு உள்ளார். இதில் என்ன கொடுமை என்றால் அந்த புல்லட்டில் இருந்து நான் விழுந்து கிடக்கும் நிலையில் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. வண்டிக்கு என்ன சேதம் ஆகிவிட்டதோ என்று தான் அனைவரும் பார்த்தார்கள் என்பதை கூறிவிட்டு ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்ளோ வெயிட்டா இருக்கு எனவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் லைக்கும், கமெண்டும் தெரிவித்து வருகின்றனர். இதில் ஹைலைட் என்னவென்றால் கோமாளி பட நடிகை சம்யுக்தா தனது கமெண்டில் சூப்பர் எனக் கூறியுள்ளார். ஷ்ரதா ஸ்ரீநாத் இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here