சூப்பர் டீலக்ஸ் படத்தில் வருவதுபோல் 90ஸ் கிட்ஸ் சிடி கடைகளுக்கு முக்காடு போட்டுக்கொண்டு போகத் தேவையில்லை. வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து வியர்க்க விருவிருக்க யூட்யூப் ஹிஸ்ட்ரியை டெலிட் செய்யத் தேவையில்லை. Y2K கிட்ஸ் சாவகாசமாக ஏசியைப் போட்டுக்கொண்டு, காதில் ஹெட்ஸெட் பொருத்திக்கொண்டு நடுஹாலில் உட்கார்ந்து பலான படத்தை நாசூக்காக வெப்சீரிஸ் என்ற பெயரில் பார்க்கிறார்கள்.
துள்ளுவதே இளமை
BDSM வகையறா படங்களுக்கும் தியேட்டர் வந்துப் பார்க்கும் அளவிற்கு தனி கிராக்கி உள்ளது என்பதை
’50 ஷேட்ஸ் ஆஃப் க்ரே ’ போன்ற படங்கள் நிருபித்தன. அதற்கு முன் எரோட்டிக்கா என்ற வகைப் புத்தகமாக அது வெளிவந்தபோதும் அதை வாங்கிப்படிக்கத் மக்கள் தயங்கவில்லை. ஏனென்றால் அமெரிக்கா ஒரு விடலை ‘அமெரிக்கன் பை’ பார்ப்பதை அங்கீகரிக்கும் ஒரு சமூகம். ‘மலீனா’,‘தி ரீடர்’ போன்ற படங்களில் வரும் ஆபாசக்காட்சிகளை கதையோடு சேர்த்துப் பார்த்தவர்கள் யாருக்கும் அந்தக் காட்சிகளைத் திரும்பப் பார்க்க வேண்டும் என்றே தோன்றாது. இங்கு ’துள்ளுவதோ இளமை’, ’ பாய்ஸ்’ போன்ற படங்களே லேட் பிக்கப்தான். ’இருட்டு அறையில் முரட்டு குத்து’போன்ற இரட்டை அர்த்த வசனம் பேசும் படங்களைத் திரையரங்குக்குச் சென்று பார்க்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவர் யாரும் வீடு திரும்ப முடியாது.
வி.ஐ.பி ரகுவரன்கள் பிசியாகிவிட்டார்கள்
”டிவியப் போட்டாலே யார் யாரக் கொல்லப்போரா, யாருக்கும் யாருக்கும் தொடர்பிருக்குன்னு ஒரே மாதிரியான சீரியல்கள், வில்லிகளின் பஞ்ச் வசனங்கள், போதாக்குறைக்கு 5 நிமிஷத்துக்கு ஒரு முறை விளம்பரம்.சரி இப்பத்தான் கதை சுவாரஸ்யமா போதுதுன்னு பார்த்தா தொடரும். இதெல்லாம் மனுஷன் பார்ப்பானா” என்று அலுத்துக்கொண்டு நழுவிச்செல்லும் டீன் ஏஜ் பிள்ளைகள் பல வருடங்கள் டிவியில் ஓடக்கூடிய தொடர்களை ஒரே வாரத்தில் பிஞ்ஜ் வாட்ச் செய்கிறார்கள். கன்னித்தீவுகூட வாசிக்காத ஒரு தலைமுறை நிழலுலகைப் பற்றிய கதைகளை ரசிச்சுப் பார்க்குது. மருந்துக்கும் வாசிக்காததால் கான்ஸ்பிரசிகளை அப்படியே நம்புது. ஐம்டிபி ரேட்டிங்க்தான் ஒரே அளவுகோள். ஆங்கிலத் தொடர்களுக்கு நிகரா இந்திய மொழித் தொடர்களும் வரனும்னா ஒருத்தரோட அந்தரங்கத்தை அரங்கேற்றுவது பெரிய தப்பில்லை. கல்யாண வயசு வர்றதுக்குள்ள லிவ்-இன், ஹேங்க் ஓவர், ப்ரேக் அப் இதையெல்லாம் அனுபவிக்கலன்னா டிப்ரஷன் வந்துடும்னு நினைக்குது.
OTP இல்லா OTT
காமசூத்ராவையோ, கஜுராஹோவையோ டீன் ஏஜ் பசங்களிடம் சேர்க்கும் விதத்தில் நாம் சேர்க்கத் தவறியதால் ஒருவித பாலியல் வரட்சியில் இருக்கும் அவர்களை இதுபோன்ற தொடர்கள் சுண்டி இழுக்கின்றன.’சேக்ரட் கேம்ஸ்’ வரிசையில் ’காட்மேன்’ தொடரிலும் வரம்பு மீறிய ஆபாசக் காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது என்பதை பகிரங்கமாகவே விளம்பரப்படுத்துகிறார்கள். ஒரு சாரார் அதைத் தடை செய் என்று கோஷம் எழுப்பும்பொழுது அப்படி என்னதான் இருக்குன்னு ஒருமுறை பார்த்திடுவோம்ங்கற தீர்மானத்தோடு அவர்களை இயங்கச் செய்கிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் ஒளிபரப்பாகவிருக்கும் வலைத்தொடர்கள் 100 நாட்களுக்குள் ஒரு சுய தணிக்கைச் சான்றிதழை அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஆல்ட் பாலாஜி, ஜீ5,எமெக்ஸ் ப்ளேயர், வூட்,சோனி லிவ், ஹாட்ஸ்டார் போன்ற செயலிகளுக்கு அரசாங்கம் கெடு வைத்துள்ளது. ஆனால் ஊரடங்கு காரணத்தால் அதை அமல்ப்படுத்துவதில் தாமதம் ஏற்படலாம்.
ஸ்டீரியோடைப் கதாபாத்திரங்கள்
அதனால் பிள்ளைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை பற்றிச் சகஜமாக உரையாடுங்கள். சொல்லத் தயங்கும் ஒன்றைச் செய்கிறார்கள் என்றால் அதை ஏன் செய்யக்கூடாது என்பதை புரிய வைய்யுங்கள். காவி போட்டாலே கெட்டவன், தாடி வைத்திருந்தாலே தீவிரவாதி, காரியம் ஆகனும்னா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கறது தப்பில்லை, சப்ஸ்டென்ஸ் எடுத்தா எல்லா பிரச்சனையையும் மறந்திடலாம், ஹேக்கர்கள்தான் அறிவுஜீவிகள் என்பன போன்ற ஸ்டீரியோடைப்புகளைவிட்டு நிஜ உலகிற்கு அவர்களை அறிமுகப்படுத்துங்கள். போதனைகள் போரட்டிக்கும். அதனால எக்ஸசைர்ஸ்,யோகா,ம்யூசிக் போன்ற நல்ல போதைகள் பக்கம் அவங்க கவனத்தத் திருப்பிவிடுங்க. சியர்ஸ்!