சமீபத்தில் குழந்தை பெற்ற சின்னத்திரை புகழ் ஆலியா மானசா தனது அழகான மகளை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்

ராஜா ராணி தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரியவந்தது.

கொஞ்சி விளையாடும் வீடியோ

இதனையடுத்து சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா. அவர் எப்பொழுது தன் செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்டாலும், முகம் தெரிவது இல்லை என்பதுதான் ரசிகர்களின் வருத்தம். குட்டிப் பாப்பாவின் முகம் தெரியும் வகையில் புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ் கார்த்திக்கிற்கு அன்பு கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு பிறகு குழந்தையின் முகம் தெரிவது போல நிறைய வீடியோக்கள் வெளியிட்டார் ஆலியா மானசா. அதனைப் பார்த்த ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். அதில் குட்டி சஞ்சீவ், குட்டி ஆல்யா, குட்டிபப்பு என்றும் கூறி வந்ததோடு, அந்த வீடியோவை பகிர்ந்தும் வந்தனர். தற்போது தனது மகளுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோவை ஆல்யா மானசா வெளியிட்டுள்ளார். இதனையும் அவரது ரசிகர்கள் ரொம்பவே குஷியாக கொண்டாடி வருகின்றனர்.

திட்டித் தீர்த்த ரசிகர்கள்

ஆல்யா கர்ப்பமாக இருந்தபோது பிரசவத்திற்கு முந்தைய நாள் வரை வேலை பார்த்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆல்யா விளம்பர படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி, சஞ்சீவ் கார்த்திக்கை திட்டித் தீர்த்தனர். ராஜா ராணி சீரியல் மாதிரி இல்லாமல் நிஜத்திலாவது ஆல்யாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்னைக்கோ, நாளைக்கோ பிரசவம் என்று இருக்கும் பெண்ணை இப்படி வேலை செய்ய விடலாமா என்று கேள்வி எழுப்பினார்கள். எப்பொழுதும் பிசியாக இருந்து பழகிய ஆல்யாவால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால்தான் குழந்தை பிறக்கும் வரை வேலை பார்த்தார். ஆனால் ரசிகர்களோ சஞ்சீவ் மீது கோபித்துக் கொண்டார்கள். குழந்தை பிறந்த கையோடு ஆல்யா சில நிறுவனங்களின் பொருட்களை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்யும் வேலையை துவங்கிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here