தல அஜித்தின் 60வது படமான ‘வலிமை’ திரைப்படம் தியேட்டரில் மட்டும் தான் ரிலீஸ் ஆகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

‘V’ சென்டிமென்ட்

வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, விவேகம், வேதாளம், விஸ்வாசம், வீரம் என V சென்டிமென்டுடன் மீண்டும் களமிறங்குகிறார் நடிகர் அஜித். அந்த வகையில் தல அஜித்தின் 60வது படத்திற்கு ‘வலிமை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 2, நேர்கொண்ட பார்வை என தொடர்ந்து வெற்றி படைப்புகளை தந்த ஹெச்.வினோத், வலிமை படத்தை இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

‘வலிமை’

தல அஜித்தின் 60வது படமாக உருவாகும் வலிமை படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கனவே என்னை அறிந்தால், விஸ்வாசம் திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, இப்படத்திலும் நடிக்க இருக்கிறார். நேர்கொண்ட பார்வையில் தெறிக்கவிடும் வசனங்களை அளித்த ஹெச். வினோத்தின் வசனங்கள், நிச்சயமாக வலிமை திரைப்படத்திலும் வலிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அஜித் உறுதி

ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், கடந்த மே மாதம் 11-ம் தேதி முதல் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சில திரைப்படங்களின் பணிகள் நடைபெற்றன. எனினும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி வலிமை படத்தின் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் என்று நடிகர் அஜித் தயாரிப்பாளர் போனி கபூருக்கு வலியுறுத்தியதாகவும், அதற்கு தயாரிப்பாளரும், இயக்குநரும் சம்மதம் தெரிவித்ததாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் வலிமையை முடிக்காமல் வேறு எந்த படமும் நடிக்கச் செல்லமாட்டேன் என்றும் கொரோனா பிரச்சனை முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு ஷூட்டிங் செல்லலாம் என்ற தீர்க்கமான முடிவையும் போனி கபூரிடம் அஜித் தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் தான் ரிலீஸ்

இதனிடையே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை திரைப்படம் பற்றிய சில தகவல்களை தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளாவது; ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இந்த கொரோனா தாக்கம் குறைந்ததும் ஆரம்பமாகும். தற்போது OTT தளங்களில் படங்கள் வெளியாவது பற்றி கேட்டதற்கு, மாறி வரும் காலகட்டத்தை நாம் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். சில தயாரிப்பாளர்களுக்கு அந்த தளமும் உதவுகிறது. இதுவரை நான் தயாரித்த அனைத்து படங்களும் தியேட்டரில் தான் வெளியானது. அந்த வகையில் அஜித்தின் வலிமை திரைப்படமும் கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியாகும். ரசிகர்களுக்கு வலிமை படம் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

வலிமை திரைப்படம் தொடர்பாக போனி கபூர் அளித்துள்ள பேட்டி, அஜித் ரசிகர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போனி கபூர் தெரிவித்த விஷயங்கள் “Valimai release boney kapoor latest speech” என்ற பெயரில் இணையதளங்களில் தற்போது டிரென்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here