46வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஜய்க்கு வைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

விஜய் – வடிவேலு

வைகைப்புயல் வடிவேலு விஜய்யுடன் 1995 ஆம் ஆண்டில் வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தார். அதே வருடம் இரண்டாவது முறையாக சந்திரலேகா படம் மூலம் இணைந்தார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் விஜய்யுடன் வடிவேலு நடித்துள்ளார். குறிப்பாக ஃபிரண்ட்ஸ், வசீகரா, பகவதி, சச்சின், காவலன், மதுர, போக்கிரி போன்ற படங்களில் இருவரும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர்.

வாழ்த்து

விஜய் பிறந்தநாளையொட்டி நடிகர் வடிவேலு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; ராஜாவின் பார்வையிலே படம் முதல் சமீபத்தில் வந்த மெர்சல் படம் வரை உன்னுடன் பல படங்களில் நடித்துள்ளேன். உன்னுடைய வெற்றி தோல்விகளை உடன் நின்று பார்த்து வருகிறேன். இந்த சினிமா உள்ளவரை உன் பெயர் ஒலிக்கும் அளவிற்கு உச்சம் தொட, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா.

கொரோனா பற்றி வடிவேலு

இறைவன் ரிலீஸ் செய்த படம் கொரோனா. அனைவரும் வீட்டில் இருந்தே அந்தப் படத்தை பாருங்கள். அந்த படம் எப்போ முடியும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த படத்தைத் தூக்கினால்தான் நாம் நிம்மதியாக வர முடியும். இவ்வாறு வடிவேலு பேசியுள்ளார். தான் நடித்த கற்க கசடற படத்தில் சும்மாவே இருக்கும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்து இருப்பார். இந்த கொரோனா லாக்டவுனில் பலரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி, வீட்டில் சும்மா இருக்க முடியாமல், தவித்து வருகின்றனர் என்றும் அந்த வீடியோவில் வடிவேலு தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா குறித்த பாடல் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் வடிவேலு, அடிக்கடி வெளியில் அலைந்து போலீஸ்காரர்களை தொல்லை செய்து தேவையில்லாமல் பிரம்படி வாங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப் சீரிஸ்

வெப் சீரிஸ்’ என்பது இன்றைய நடிகர், நடிகைகளின் சீரியலுக்கு மாற்றான களமாக உருவாகியுள்ளது. சீரியலில் நடித்தால், மார்க்கெட் போச்சு என்று கேலி, கிண்டலை தவிர்க்க சினிமா கலைஞர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகவே வெப் சீரிஸ் பார்க்கப்படுகிறது. மீடியாவிடம் இருந்து விலகியே இருக்கும் வைகைப்புயல் வடிவேல், சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னை ஒரு வெப் சீரிஸ் நிறுவனம் அணுகியிருப்பதாகவும், அதில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மீண்டும் வடிவேலு

அதற்குள், கமல்ஹாசனுடன் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் வடிவேலு ஒப்பந்தம் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில், சமீபத்தில் நடந்த திரை உலகில் கமல்ஹாசனின் 60வது ஆண்டை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட விழாவில், வீட்டை விட்டு வெளியவே வராத வடிவேலு கலந்து கொண்டார். கலந்து கொண்டது மட்டுமின்றி, மேடையேறி, அவர் பேசிய ‘தேவர் மகன்’ பிளாஷ்பேக் இணையதளத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது. ‘தலைவன் இருக்கிறான்’ தேவர் மகன் இரண்டாம் பாகம் என்று கூறப்படுவதால், அப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த வடிவேலு, லேட்டஸ்ட் பாகத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகிய நிலையில், கமல் விழாவில் அந்நிகழ்வு உறுதி செய்யப்பட்டது. கமல் தனது ‘இந்தியன் 2’ ஷூட்டிங்கை முடித்தவுடன் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை தொடங்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here