சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை செய்யப்பட்டுள்ள என நடிகை பாயல் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
சுஷாந்த் மரணம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை பாந்தரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சுஷாந்தின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. மனஅழுத்ததின் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாதாக கூறப்படும் நிலையில், இது தற்கொலை அல்ல, கொலை என்று பாலிவுட் ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்கொலை? கொலை?
சுஹாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார் என ரசிகர்கள் கூறி வரும் குற்றச்சாட்டை நடிகை பாயில் ஆதரித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சுஷாந்த் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது; சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. அவரை கொலைதான் செய்துள்ளனர். அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால், அவர் தூக்குப் போட்டு இறந்து போவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். ஏனென்றால் அவரது உயரம் 5.10 தான். அவரது படுக்கைக்கும் வீட்டின் உச்சவரம்புக்கும் உள்ள இடைவெளி ரொம்பவே குறைவாக உள்ளது. அதனால் அவர் தூக்கிலிட்டு கொள்வதற்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. சுஷாந்த்தால் காலை மடக்கிக்கொண்டு ரொம்ப நேரம் தூக்கில் தொங்க முடியாது.
சிசிடிவி காட்சிகள் இல்லை
சுஷாந்த் சிங் வீட்டில் எல்லா இடத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட அந்த அறையில் மட்டும் ஏன் சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏன் அவர் வீட்டு வேலைக்காரர்கள் போலீசிடம் முதலில் தெரிவிக்காமல் டூப்ளிகேட் சாவி செய்பவரிடம் சென்றுள்ளார்கள். நான் சுஷாந்த் சிங்கை இதுவரை நேரில் சந்தித்ததும் இல்லை. போன் காலில் பேசியதும் இல்லை. ஆனால் அவரது இழப்பு எனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதோடு மட்டுமல்லாமல், இதற்கு பின்புறத்தில் யாரெல்லாம் வேலை பார்த்தார்கள் என்பதை கண்டுபிடித்து கண்டிப்பாக மக்கள் முன்னிலையில் முகத்திரையை உரித்தெடுப்பேன்.
மரணத்தில் சந்தேகம்
மகேஷ் பட் ஏற்கனவே ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது சுஷாந்த் சிங் கண்டிப்பாக ஒருநாள் தற்கொலை செய்து கொள்வார் என்று கூறியிருந்தார். இது அவருக்கு முன்கூட்டியே தெரியும். சுஷாந்த்தை ஏன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லவில்லை. தூரத்தில் இருக்கும் குறிப்பாக கூப்பர் மருத்துவமனைக்கு கூட்டிப் போக வேண்டிய சூழ்நிலை என்ன?. பிரேத பரிசோதனையில் சுஷாந்த் தற்கொலைதான் செய்துகொண்டார் என்றும் அதில் அவர் மூச்சு திணறி இறந்து இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு இதில் சந்தேகம் உள்ளது. அவர் கழுத்தில் உள்ள அடையாளத்தை வைத்து பார்க்கும் பொழுது, சுஷாந்த் தூக்குப் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. யாரோ கயிறை வைத்து அவரது கழுத்தை நெரித்தது போல தான் உள்ளது. சுஷாந்த் மரணத்தில் அவரது வீட்டு வேலைக்காரர்கள் மீதும் சந்தேகம் உள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் அவர் இறந்து போவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாதுளை பழச்சாறு, மன அழுத்தத்திற்கு தேவையான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். அவர் தற்கொலை நினைத்திருந்தால் ஏன் இவ்வாறு செய்யவேண்டும்.
சோனம் கபூர், சல்மான் கான்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுஷாந்த் சிங்கை அவமானப்படுத்தி உள்ளார் சோனம் கபூர். சல்மான்கான் சுஜித் சிங் மரணத்திற்கு அனைவரும் உதவி செய்யுங்கள் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அவர்கள் இவ்வளவு நல்லவர்களாக நடிக்க தேவையில்லை. சுஷாந்த் சிங்கின் மரணம் முழுக்க முழுக்க நெப்போட்டிஸத்தை சார்ந்தே உள்ளது. இதனை ஒழிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. பாலிவுட் நடிகர், நடிகைகள் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த நெப்போட்டிஸத்தை ஒழிக்க முடியும். இவ்வாறு அந்த வீடியோவில் நடிகை பாயல் கூறியிருக்கிறார்.