கொரோனா தொற்றைத் தடுக்கவும் அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்யவும் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கப் பிரஜைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதையடுத்து கூகில் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் அமெரிக்க- இந்தியரான சுந்தர் பிச்சை கடும் அதிருப்தியைத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற க்ரீன் கார்ட் வைத்திருக்கும் வெளி நாட்டவருக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் H-1B,L1,J,JH2,JH4 விசாக்கள் மூலம் அமெரிக்கா செல்லத் தயாராக இருந்தவர்கள் இந்த ஆண்டு இறுதிவரைக் காத்திருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.  இந்த வருடம் நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் என்ற நெருக்கடி நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளை எதிர்பார்த்ததுதான். ஆனால் விசா இருந்தும் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு வந்தவர்கள் திரும்பி செல்ல இயலாது என்பதுதான் இதில் எதிர்பாராத ஒன்று.

சுந்தர் பிச்சை அதிருப்தி

அமெரிக்கா வந்தேறிகளின் நாடு. இந்த நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதில் வந்தேறிகளின் பங்கு அளப்பரியது. கூகில் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை உலகத்தின் தொழில்நுட்ப முன்னோடியாக வளர்த்தெடுத்ததில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பை யாரும் மறுக்கவே முடியாது. அதை எல்லாம் ஒரே கணப்பொழுதில் துடைத்தெறிவதுபோன்ற இந்த அறிவிப்பு மிகுந்து வேதனை அளிக்கிறது. கூகில் வந்தேறிகளைக் கைவிடாது. வாய்ப்புகளை எல்லோருக்கும் முடிந்தவரைப் பகிர்ந்தளிக்க ஆவன செய்யப்படும்.

வருங்காலம் எப்படியிருக்கும்?

நவம்பர் மாதம் தேர்தல் முடிந்ததும் பதவி ஏற்பவர் இதன் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்த்து செயல்படுவார். அதற்குள் கொரோனா தொற்று தொடர்பான பதட்டம் ஒரு தீர்வையெட்டிவிட்டால் மீண்டும் ஒரு சில வருடங்களில் இயல்பு நிலை திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதைத்தான் சுந்தர் பிச்சையின் அறிவிப்பு கட்டியம் கூறியுள்ளது . வடநாட்டிற்குக் கால் நடையாகவே திரும்பிச்சென்ற கூலித் தொழிலாளிகள் ஒருபுறம் இருக்க அவர்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் முதலாளிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here