கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் தன்னை மட்டும் விமர்க்கிறார்கள் என்று நடிகை ரியாசென் கோபத்துடன் கூறியிருக்கிறார்.
ரியா சென்
பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ரியா சென். பாட்டி, தாய், அக்கா வழியில் நடிகையானவர். பிரசாந்தின் குட்லக் படத்தை தொடர்ந்து, அரசாட்சி படத்தில் நடித்த அவர், ஒரு சில தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ரியா சென் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் ஆவார்.
கவர்ச்சிப் புகைப்படங்கள்
ரியாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அரைகுறை உடையுடன் இருக்கும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். திரைப்படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டுவதாகவும், முத்தக்காட்சிகளில் நடிப்பதாகவும் அவர்மீது விமர்சனங்கள் எழுந்தன. மார்க்கெட் இல்லாத நேரத்தில் ரியா சென் டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை புகழ்ந்தும், விமர்சித்தும் வருகிறார்கள்.
குறிவைத்து தாக்குதல்
இதற்கு பதிலளித்துள்ள நடிகை ரியா சென் கூறியதாவது: “நான் குட்டை பாவாடை அணிவதை சர்ச்சையாக்குகின்றனர். முத்தக்காட்சியிலும், கவர்ச்சியாகவும் நடித்தால் துணிச்சலாக செய்துள்ளார் என்கின்றனர். முன்னணி நடிகைகள் இதுபோல் உடை அணிந்தாலோ, முத்தக் காட்சிகளில் நடித்தாலோ யாரும் கண்டு கொள்வது இல்லை. ஆனால், என்னை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர்.
நண்பர்கள் கேலி
உன்னை மட்டும் ஏன் தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள் என்று எனது நண்பர்கள் கேட்கின்றனர். எனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் இந்த தாக்குதல் நடக்கிறது.“ இவ்வாறு அவர் கூறியுள்ளார். ரியாவின் கையில் தற்போது சுத்தமாக எந்த படங்களும் இல்லை. அவர் கடைசியாக ‘லோன்லி கேர்ள்’ என்ற குறும்படம் ஒன்றில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.