கொரோனா அச்சம் காரணமாக நடிகை நயன்தாரா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக வெளியான தகவலை இயக்குநர் விக்னேஷ் சிவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கொரோனா வைரஸ்

சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நோய்த்தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் உச்சத்தை எட்டியுள்ளது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

பரவும் கொரோனா

இந்த நிலையில் திரையுலகினர் சிலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மாரடைப்பால் உயிரிந்த பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல். ராகவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தனிமையில் நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், மிஷ்கின் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகன. ஆனால், இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள இயக்குநர் விக்னேஷ், நடிகை நயன்தாரா குறித்து வெளியான செய்தியில் உண்மையில்லை எனக் கூறியுள்ளார். நயன்தாரா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வீட்டில் இருக்கிறார் எனவும் அவர் தினமும் உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here