சன் டிவி சீரியல்களிலேயே ரசிகர்களை அதிகளவில் கவர்ந்த ‘ரோஜா’ சீரியலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்க உள்ளார்.

இளைஞர்களின் கனவுக்கன்னி

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். அப்போதிருந்தே அடல்ட்வாசிகளின் கனவுக்கன்னியாக திகழ்கிறார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இவர், குடும்ப உறுப்பினர்கள் மத்தியிலும் முகம் தெரியும் அளவிற்கு பிரபலமானார். ஜாம்பி, நோட்டா என ஒரு சில திரைப்படங்களில் நடித்த யாஷிகா, தற்போது படங்கள் ஏதும் கிடைக்காமல் இருந்து வருகிறார்.

‘ரோஜா’

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களிலேயே ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற சீரியல் ‘ரோஜா’. கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தத் தொடரில் ராஜேஷ், வடிவுக்கரசி,’மெட்டி ஒலி’ காயத்ரி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். ‘ரோஜா’ தொடருக்கு ஏற்கெனவே சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்கரி, சிப்பு சூரியன் என பலர் நடித்து வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில்தான் தற்போது யாஷிகா ஆனந்த் கமிட்டாகியிருக்கிறார்.

முக்கியமான கதாபாத்திரம்

யாஷிகா ஆனந்த் நடிக்கும் ரோல் குறித்து விசாரித்ததில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பின்னர், நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் யாஷிகாவின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளனர். மேலும், சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஹீரோவுடன் யாஷிகா பைக்கில் போற மாதிரியான சில காட்சிகள் கூட படமாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நிறுத்தம்

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில், பல கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை தொடர்களை நடத்திக்கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டன. ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்களில் பெரும்பாலானவை OTT தளத்தில் வெளியிடப்படுகின்றன.

சம்பளம்!

ஏற்கனவே சீரியல் ரசிகர்கள் மத்தியில் ‘ரோஜா’ தொடர் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நிலையில், யாஷிகா அறிமுகம் ஆனதும் அதிக வரவேற்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், இந்த தொடரில் ஒரு எபிசோடில் நடிக்க யாஷிகாவிற்கு ஒன்றரை லட்சம் சம்பளமாம். கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு படப்பிடிப்புகள் நடந்தால், ‘ரோஜா’ சீரியலில் யாஷிகாவை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here