ராம் விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற மத்திய அமைச்சர்கள் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் திடீர்த் தாக்குதலையொட்டி  சீன பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இது எந்த அளவிற்கு சாத்தியம்?

செயலியே செயலிழ!

சீனாவின் அத்துமீறிய  எல்லைத் தாக்குதலையடுத்து டிக்-டாக் செயலியை பதிவிரக்கம் செய்திருந்த  இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற பிரபலங்கள் பலர் சீனாவிற்கு எதிரான தங்கல் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அதை தங்கள் செல்ஃபோன்களின் இருந்து அகற்றிவிட்டதாக பதிவிட்டிருந்தார்கள். ஆனால் நடைமுறையில் டிக்-டாக் வீடியோக்கள் மூலம் மட்டுமே நல்ல வருவாய் பார்த்துவந்தவர்கள் இதைச் செய்வார்களா என்பது சந்தேகமே.அப்படிப்பார்த்தால் ஜூம்,ஓலா, ஸ்விக்கி,ஹைக், ஹெலோ உட்பட்ட 52 செயலிகளை நாம் புறக்கணிக்க வேண்டும். இந்தச் செயலிகள் மூலம் சீன நிறுவனங்களின் அத்துமீறிய தகவல் திருட்டை மத்திய உளவுத் துறை கண்காணித்து வருகிறது. மக்களே  இவர்களை இனம்கண்டு ஆதரவு அளிப்பதைக் கைவிடவேண்டும் என்று மத்திய நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறக்குமதிக்குத் தடா!

செல்ஃபோன்களை மட்டும் எடுத்துக்கொண்டோம் என்றாலே ஓப்போ, ஒன் ப்ளஸ்,விவோ,ரியல் மீ போன்ற வை முழுக்க முழுக்க சீனாவில் தயாரிக்கப் படுபவை.தவிர ஏஎஸுஸ்,ஹுவேய்,லெனோவோ, ரெட்மீ,சாம்சங்,ஹெச்டிசி,  நோக்கியா போன்ற ஃபோன்கள் இந்தியாவில் அசெம்பில் செய்து விற்கப்படுகின்றன.பெட்ரோலியப் பொருட்கள், மசாலா, பருத்தி, இரும்புத்தாதுகள் போன்ற பல பொருட்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம்.2019-20 இல் இந்தியாவின் சீன ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இருக்கும்  வித்தியாசம்(trade deficit) மட்டும் 3 லட்சம் கோடி.. அதனால் உடனடியாக இந்த வர்த்தகத்தை முறித்துக்கொள்வதின் பாதிப்பு அதிகம் நமக்குத்தான் இருக்கிறது.

கோகோ மோமோ!

ஹோட்டல்களில் விற்கும் சீன உணவுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இது வெறும் உணர்வுபூர்வமான கருத்தே தவிர இதில் உண்மையில்லை. நம் உணவு விடுதிகளில் விற்கப்படும் திம்சம், மோமோ,டிக்கா,மன்சூரியன் போன்ற வகை ரெசிப்பிக்கள் டிபெட்டிலிருந்து நமக்கு வந்தவை. இப்போது டிபெட் சீனா ஆக்கிரமிப்பில் இருப்பதால் அவை சீன உணவுகள் ஆகிவிடாது.ஆனால் திபெத் தலைவர் லோப்சாங் சங்கே சைனாவின் மாசே துங் துவங்கி வைத்த இந்த 5 fingers of Tiber உத்தியை குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நமக்கு நாமே!

குறு சிறுதொழில்களுக்கான அமைப்பின்(MSME) புதிய தலைவராக திரு.ஏ.கே.ஷர்மா கடந்த ஏப்ரல் 30 பதவியேற்றார். அவர் இந்தியாவே அதன் கூகில், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஃபேஸ்புக்கை வளர்த்தெடுப்பதன் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.
நல்ல வேளை. இந்தப் போர் மட்டும் அமெரிக்காவுக்கு எதிரானதாக இருந்தால் நம் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகியிருக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here