சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து ‘இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை’ எனக் கூறி நடிகர் விவேக் டுவிட் செய்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் விவேக். காமெடி மட்டுமின்றி சமூகம் சார்ந்த பல நல்ல கருத்துகளையும் திரைப்படம் வாயிலாக முன்வைப்பதில் வல்லவர். விவேக் திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்தே அவருக்கென தனி ரசிகர்கள் உண்டு. மரம் வளர்ப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள விவேக், அவ்வப்போது பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

பரவும் கொரோனா

கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸின் வேகமாக அதிகமாக பரவி வருகிறது. சென்னையில் இதுவரை 33 ஆயிரத்து 244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக பல்வேறு நடவடிக்கைகளை துரித நிலையில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடாது சென்னை

இந்நிலையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து நடிகர் விவேக் டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “எல்லோரும் கழிவிரக்கம், அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள். பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி, இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும்; வாழும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here