பத்திரிக்கையாளர்களை மரியாதை குறைவாக பேசியதையடுத்து நடிகை குஷ்பு அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

சின்னத்திரை ஷூட்டிங்குக்கு அனுமதி

கொரோனா கட்டுக்கடங்காமல் பரவுவதையடுத்து, உலகமே லாக்டவுனில் இருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளதால் ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு மீண்டும் பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முடங்கிக்கிடந்த திரையுலகம் தற்போது மீண்டும் செயல்பட இருக்கிறது. சின்னத்திரை சூட்டிங் நடத்த அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.

ஆடியோ சர்ச்சை

இந்நிலையில், டிவி சீரியல் ஷூட்டிங் நடத்துபவர்களுக்கு குஷ்பு ஒரு ஆடியோ அனுப்பியுள்ளார். அதில் தேவை இல்லாமல் பத்திரிகையாளர்களை மரியாதைக் குறைவாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியானதையடுத்து, அனைத்து ஊடகத்துறையினரின் ஒட்டுமொத்த கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் குஷ்பு.

மன்னிப்பு கேட்ட குஷ்பு

குஷ்பு பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்த விளக்கத்தையும் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு ஆடியோ சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது. எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. நான் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here