தேவையானவை
அவல் – 1 டம்ளர்
சர்க்கரை – 1 1/2 டம்ளர்
ஏலக்காய் போடி – சிறிதளவு
கேசரி பவுடர் – சிறிதளவு
தண்ணீர் – 2 1/2 டம்ளர்
நெய்+முந்திரிபருப்பு+கிஸ்மிஸ் – தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலியில் அவலை நன்றாக வறுத்து அதன்பின் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி சூடாகிய பின், முந்திரிபருப்பு மற்றும் கிஸ்மிஸ் ஆகியவைகளை வறுத்து எடுத்து வைக்கவும். அதன்பின் அரைத்த அவலை போதுமான அளவு எடுத்து 2 1/2 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து சிம்மில் வைத்து கிளறிக்கொண்டே கேசரி பவுடர் ,சர்க்கரை ,ஏலக்காய்பொடி அதில் சேர்க்கவும். இறுதியாக நெய் மற்றும் முந்திரிபருப்பை சேர்த்து நன்கு கிளரி இறக்கவும்.
அவலின் நன்மைகள்
- உடல் சூட்டை தணிக்கும்
- உடல் எடையை குறைக்க பயன்படுகிறது
- அவலோடு பாலும் நெய்யும் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.
- அவலும் மோரும் கூட சேர்த்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டால் அதிக தாகம் உண்டாவது தீரும்.