தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரது தந்தையும், இயக்குனருமான டி. ராஜேந்தர் விளக்கமளித்துள்ளார்.

காதல், தோல்வி

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவும், நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்திரின் மகனுமான சிம்பு முதலில் நயன்தாரா, பின்னர் ஹன்சிகா ஆகியோரை காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இரு காதல்களும் தோல்வியில் முடிந்ததால் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

ஜாதகப் பொருத்தம்

பல இடங்களில் இருந்து மணப்பெண்களின் புகைப்படங்களும், ஜாதகங்களும் வந்து குவிந்த நிலையில், ஜாதகம் பொருந்தாததால் அவருடைய திருமணம் தள்ளிப்போனது. சில ஜாதகங்கள் பொருந்தினாலும், சிம்புவுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்தால், குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்த காரணங்களால் மணப்பெண் அமையவில்லை.

விரைவில் திருமணம்?

இது, அவருடைய குடும்பத்தினரை போலவே ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகிக் கொண்டே போனது. இந்த நிலையில், நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் பரவின.

கோடீஸ்வர பெண்

லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த பெண் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் சிம்பு திருமணம் குறித்து வெளியான தகவல் முற்றிலும் தவறானது என அவரது தந்தையும், நடிகர் மற்றும் இயக்குனருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

வதந்தியை நம்ப வேண்டாம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சிம்புவின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிம்புவின் திருமணம் பற்றிய நற்செய்தியை சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு டி. ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here