நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலை அவரது சகோதரர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பா?
நிழல் உலக தாதாவும், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்டவருமான தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அவர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தாவூத் வீட்டு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
உண்மையல்ல
தாவூத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் கூறியிருக்கிறார். தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் வீட்டில் இருப்பதாகவும் அனீஸ் தெரிவித்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
மரணம்?
இதற்கிடையே தாவூத் இப்ராகிம் மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைத்தளில் போலியான தகவல் பரவி வருகிறது. மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராகிம் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவர், பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் அரசு இதை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.