பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பக்திப் பாடல்கள் இல்லை உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ந் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, வரும் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வழிமுறைகள்

நுழைவாயில்கள் கண்டிப்பாக சுகாதாரத்துடன் சானிடைசர்ஸ் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும்முறை இருக்க வேண்டும்.

அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். அதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.

சமூக இடைவெளியுடன் கூடிய முறையான பார்க்கிங் வசதி இருக்க வேண்டும்.

வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

வரிசையில் நிற்பவர்கள் இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் குறியீடுகள் வரைந்திருக்க வேண்டும்.

முறையான நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியே இருக்க வேண்டும்.

வரிசையில் நிற்கும்போது குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.

சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

அதிக அளவு மக்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது. அத்துடன் பஜனைகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை.

ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

பக்தர்களுக்கு பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.

சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள மத வழிபாட்டு தலங்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்.

ஹோட்டல்களுக்கான வழிகாட்டுதல்

சானிட்டைசர் டிஸ்பென்சர் மற்றும் தெர்மல் ஸ்கேனர் ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.

அறிகுறியற்ற ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

முகக்கவசத்தை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நுழைய அனுமதிக்க வேண்டும்.

ஹோட்டலுக்குள் எப்போதுமே முகக்கவசம் அணிய வேண்டும்.

உணவகங்கள்

உணவகத்தில் இருக்கைகளுக்கு இடையே போதுமான சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொருமுறையும் மாற்றம் செய்யப்படக் கூடிய மெனு கார்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றன.

துணி நாப்கின்களுக்கு பதிலாக, நல்ல தரமான ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத் தக்க காகித நாப்கின்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறைகளுக்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here