தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவரான நடிகை பிந்துமாதவி 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

வளரும் நடிகை

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, கழுகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிந்து மாதவி. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான இவர், அடுத்ததாக மாயன், யாருக்கும் அஞ்சேல் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

கொரோனா

இந்த நிலையில், நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைப்பதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

14 நாட்கள் தனிமை

மேலும் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here