நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. 4-வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 5-வது கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கட்டுப்பாடு, தளர்வு

அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் கட்டுப்பாடு இல்லாத மற்ற பகுதிகளில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிப்புகள்

* திரையரங்குகள், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து சூழலுக்கேற்ப முடிவெடுக்கலாம்

* மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்

* பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது பற்றி ஜூலையில் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் அனுமதி

* மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும்

* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற பகுதிகளில் தளர்வுகளுடன் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

* ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களையும் ஜூன் 8 முதல் திறக்க அனுமதி அளிக்கப்படும்.

* கொரோனா தாக்கத்தை பொறுத்து சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும்.

* தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும்

* இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாரும் வெளியில் வரக் கூடாது

* நாடு தழுவிய அளவில் குறிப்பிட்ட வகை பிரிவுகளுக்கு மட்டுமே தடை இருக்கும்

* நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜூன் 30 வரை எந்த தளர்வும் கிடையாது

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்

* மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை.

* திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது.

* பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது

* பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம்.

* கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி.

* அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது.

* மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here