டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள்

டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள். இந்த உண்மை சம்பவத்தை வைத்து வெளிவந்த டைட்டானிக் என்ற ஆங்கிலத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது. இந்த டைட்டானிக் கப்பல் 1911-ம் ஆண்டு மே மாதம் 31ந் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

நிகழ்வுகள்

1889 – பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர்.

1900 – பிரித்தானியப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகன்னஸ்பர்க் நகரைக் கைப்பற்றின.

1902 – தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.

1910 – தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது.

1911 – டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1921 – ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர் கொல்லப்பட்டனர்.

1931 – பாகிஸ்தானின் குவெட்டா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சிட்னி நகரைத் தாக்கின.

1961 – தென்னாப்பிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.

1962 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1970 – பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 47,000 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.

1981 – யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.

2004 – வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2005 – இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஜர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2007 – டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here