நடிகை நயன்தாரா ஒரு போராளி போல் தெரிவதாக பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைஃப் பாராட்டியுள்ளார்.

பிரபல ஹீரோயின்

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் கேத்ரினா கைஃப்ம் ஒருவர். அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராப், பத்மலட்சுமி உட்பட பலர் நடித்த பூம் என்ற இந்தி படம் மூலம் அறிமுகமான இவர், இப்போது அங்கு டாப் ஹீரோயினாக வலம் வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்

தொடக்கத்தில் சில தெலுங்கு படங்களில் நடித்த அவர், தற்போது இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக சமீபத்தில் மறைந்த நடிகர் இர்பான் கானுடன் அங்ரேஸி மீடியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து அக்‌ஷய் குமாருடன், ‘சூரியவன்ஸி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரோகித் ஷெட்டி இயக்கி உள்ள இந்தப் படம் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் செய்யப்படவில்லை.

விளம்பரப் படம்

நடிகை கேத்ரினா கைஃப் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் ‘Kay Beauty’ என்ற அழகு சாதனப் பொருட்கள் விற்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதற்கான விளம்பர படத்தில் சில நடிகைகள் நடித்துள்ளனர். அதில் நயன்தாராவும் ஒருவர். கடந்த ஆண்டு இதன் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு கேத்ரினா கைஃப் நன்றி தெரிவித்திருந்தார்.

பாராட்டு

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாராவை புகழ்ந்துள்ளார் கேத்ரினா கைஃப். நயன்தாரா தன்னை பிரமிக்க வைப்பவராகவும், வலிமையானவராக இருப்பதை கண்டுகொண்டேன் என்றும் கூறியுள்ளார். அவர் ஒரு போராளியாக இருப்பதாக கூறியுள்ள கேத்ரினா கைஃப் அதையும் தாண்டி அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here