‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTTயில் ரிலீஸ் செய்யப்படுவதற்கான காரணம் குறித்து நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார்.

‘பொன்மகள் வந்தாள்’

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கி உள்ள இந்தப் படத்தில், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் உள்ளிடோர் நடித்துள்ளனர்.

OTTயில் ரிலீஸ்

பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வருகிற 29-ம் தேதி OTTயில் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

OTT நல்ல தளம்

OTTயில் திரைப்படத்தை வெளியிடுவது குறித்து நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ் நாட்டில் ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் போட்டி நிலவுகிறது. எனவே மாற்று வழியை நோக்கி செல்வது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக மாற்று சினிமாக்களுக்கு OTT நல்ல தளமாக உள்ளது.

புறக்கணிக்கவில்லை

இதனால் நாங்கள் திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல. திரையரங்குகளில் கிடைக்கும் ஆராவாரத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் அளவே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியையும் நாம் தள்ளி வைக்க முடியாது.

2 மாதங்கள் ஆகலாம்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும், படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதை உறுதியாக கூறமுடியவில்லை. இந்த நிலை மாற இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என நினைக்கிறேன். இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here