உலக தைராய்டு தினம்
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பு. வண்ணப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிறை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை, ச்இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மே 25ம் தேதி உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்களை விட, பெண்கள் தான், இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளம் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். தைராய்டு நோய்களை, தைராய்டு குறைநிலை நோய், மிகைநிலை நோய், கழுத்து கழலை நோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் என நான்கு வகையாக பிரிக்கலாம்.இந்தியாவில் பத்து இளைஞர்களில் ஒருவர் ஹைப்போ தைராய்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் எடை குறைதல், அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், அதன் மூலம் அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், மறதி, எரிச்சல், படபடப்பு, தசைகளின் பலவீனம், நடுக்கம், துாக்கமின்மை, தைராய்டு சுரப்பி வீங்குதல், முடி உதிர்தல், கை கால் மதமதப்பு, மூட்டுவலி, உடல் எடை அதிகரிப்பு, கண்களில் எரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகள்.
இந்த அறிகுறிகள் இருக்கும் போது, தைராய்டு அளவினை பரிசோதித்து சிகிச்சை எடுக்க வேண்டும். அதற்கான ‘தைராக்சின்’ மாத்திரைகளை, டாக்டர்கள் பரிந்துரையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
நிகழ்வுகள்
1810 – ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
1812 – இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
1837 – கியூபெக்கில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 – அலபாமாவில் “மொபைல்” என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1895 – போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது.
1953 – நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இஸ்ரேல் ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2001 – அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.