கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் பூஜா குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். 
‘தலைவன் இருக்கின்றான்’
‘தேவர் மகன்’ படத்தை ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் ரீமேக் செய்கிறார். அந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் வடிவேலு இப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் ரேவதி
தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவர் மகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ரேவதி இப்படத்திலும் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
பூஜா குமார்?
இந்த நிலையில், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிப்பது குறித்து நடிகை பூஜா குமார் விளக்கமளித்துள்ளார். கமல் படத்தில் நடிக்க இதுவரை யாரும் என்னை அணுகவில்லை. யாருக்கு தெரியும், நடிக்க அழைப்பு வந்தாலும் வரலாம் என அவர் கூறியுள்ளார். பூஜா குமார் ஏற்கனவே விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.















































