கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூலில் சாதனை

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – திரிஷா கூட்டணியில் உருவான திரைப்படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. 2010-ம் ஆண்டு வெளியான இப்படம், காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

வெற்றிப் படம்

சமீபத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 10வது ஆண்டு விழாவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் அப்படத்தின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

‘கார்த்திக் டயல் செய்த எண்’

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது அதன் ஒரு பகுதியை குறும்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார் இயக்குனர் கெளதம் மேனன். ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த குறும்படம் 12 நிமிடங்கள் ஓடுகிறது. சிம்பு – திரிஷா இடையே நடக்கும் செல்போன் உரையாடல்களை நிறைய காதலுடன் கொடுத்துள்ளார் கெளதம் மேனன்.

பார்க்க பார்க்க ரசனை

ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை இந்த குறும்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. பார்க்க பார்க்க ரசிக்க வைக்கும்படி குறும்படத்தை அழகாக உருவாக்கியுள்ளார் கவுதம் மேனன்.

விண்ணைத்தாண்டி வருவாயா 2

‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகத்தின் ஒரு சிறிய முன்னோட்டம் எனக் இயக்குனர் கெளதம் மேனன் ஏற்கனவே கூறியிருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் கதையை தயாராக வைத்துள்ளதாகவும், அதில் ஒரு பகுதியை எடுத்துதான் குறும்படம் தயாரித்துள்ளேன் என்றும் கெளதம் மேனன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here