தொழில்துறையின் தந்தை ஜம்சேத்ஜீ டாட்டா மறைந்த தினம்
இந்திய நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவரான ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா 1839 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ஆம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார்.
இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரீஸ் நகரத்திலேயே நீண்டகாலம் வசித்தார். 1904-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.
எஃகு உற்பத்திக்கு பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர் சூட்டப்பட்டது.
நிகழ்வுகள்
1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வடஅமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.
1604 – கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது.
1890 – வியட்நாமிய தலைவர் கோசிமின் பிறந்த தினம்
1971 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.