பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ந் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

திட்டங்கள் அறிவிப்பு

அதன்படி, கடந்த நான்கு நாட்களாக பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக இன்று பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார். நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன் உள்பட 7 அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

திட்டங்கள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்;

மத்திய மாநில அரசுகளுடன் உணவுக் கழகமும் இணைந்து மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.

ஏழைகளுக்கு ரேசன் அரிசிகளை கொண்டு சேர்த்த மாநில அரசுகளுக்கு பாராட்டு.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனாளிகளுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் மீண்டு வருவோம்.

20 கோடி பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது

பொருளாதார துறையில் இந்தியா மிக சிக்கலான ஒருக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது.

இந்தியா நெருக்கடியான நிலையில் இருப்பதை பிரதமர் ஏற்கனவே தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நெருக்கடியான சூழலில் டிஜிட்டல் பரிவர்த்தனையால் அதிகம் பேர் பயனடைந்துள்ளனர்.

ரூ. 8.19 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 2.2 கோடி தொழிலாளர்களுக்கு 3950 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கான ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு வழங்கியது.

ரயில் கட்டணத்தில் மீதம் 15% தொகையை மாநில அரசு வழங்கியது.

12 லட்சம் தொழிலாளர்கள் தங்களது இபிஎப் தொகையில் ஒரு பகுதியை திரும்ப பெற்றுள்ளனர். வருங்கால வைப்பு நிதியிலிருந்து ரூ.3600 கோடி எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைக்கு ரூ.15,000 கோடி நிதியை பிரதமர் ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளார்.

உஜ்வாலா திட்டத்தின் மூலம் ரூ. 6.81 கோடி மானியமில்லாத சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பரிசோதனை மையங்கள் அமைக்க ரூ.550 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2 கோடி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3,950 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

போக்குவரத்து தட்டுப்பாடு உள்ள நிலையிலும் 3 மாதங்களுக்கு தேவையான பருப்பு வழங்கப்பட்டுள்ளது.

PPE எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை 300 நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன.

ஊரடங்கில் இந்திய உணவுக்கழகம், வேளாண் கூட்றவு சந்தைகள் சிறப்பாக செயல்பட்டன.

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கில் உள்ள மக்களின் தேவைகளையும் அரசு நிறைவேற்றுகிறது.

மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு மையம். பொது சுகாதார ஆய்வு மையங்களை அனைத்து வட்ட அளவிலும் அமைக்கப்படும்.

ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.  1 முதல் 12 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறையில் புதியதாக 12 தொலைக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இ-பாடசாலை திட்டத்தின் கீழ் மேலும் 200 பாடப் புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 கல்விச் சேனல்கள் உள்ள நிலையில் மேலும் 12 புதிய கல்விச் சேனல்கள் தொடங்கப்படும்.

புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.

இதுவரை 87 லட்சம் N95 முகக் கவசங்களும், ரூ. 11 கோடிக்கு ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்களுக்கு இதுவரை 51 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 4113 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

நிறுவனங்களுக்கு எதிராக திவால் நடவடிக்கைகள் ஓராண்டுக்கு எடுக்கப்பட மாட்டாது.

கொரோனா காரணமாக கடன் தொகை கட்டாமல் இருந்தால் தவணை தவறியதாக கருதப்படமாட்டாது. மேலும் ரூ.1 கோடி வரை கடன்பாக்கி இருந்தால் தான் குற்ற நடவடிக்கை எடுக்கும் வகையில் விதி தளர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கானது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here