தமிழகத்தில் வருகிற மே 31ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 17ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மே 31 ந் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பொது முடக்கத்தில் எந்த தளர்வும் இல்லை.
* மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் ஆகியவற்றுக்கு தடை தொடரும்.
* தனியார், அரசு பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேரும், வேன்களில் 7 பேரும் பயணிக்கலாம்.
* தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் செயல்படுவதற்கான தடை தொடரும்.
* திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறையே வரும் 31-ம் தேதி வரை தொடரும்.
* தஞ்சை, நாகை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் ஊரடங்கு முடியும் நிலையில் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.