தனது டுவிட்டர் பதிவுகள் குறித்து தேவையற்ற கற்பனை வதந்திகளை பரப்ப வேண்டாம் என பிக்பாஸ் புகழ் லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. இவரும் நடிகர் கவினும் காதலிப்பதாக தகவல் வெளியானது. பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின் இருவரும் பேசிக் கொள்வதில்லை எனவும் கூறப்பட்டது.

கண்ணாடி முன் லாஸ்லியா

இந்த நிலையில், கண்ணாடி முன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை லாஸ்லியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், செய்த தவறை ஒப்புக்கொள்ளுங்கள், கண்ணாடி முன் நின்று உங்கள் தவறை கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

தேவையற்ற கற்பனை வேண்டாம்

லாஸ்லியா குறிப்பிட்ட இந்த பதிவு கவினுக்கான பதிலா? என பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லாஸ்லியா. நான் போடும் பதிவுகள் என்னைப் பற்றியது மட்டுமே. தேவையில்லாமல் எதையும் கற்பனை செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here