முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை, அப்படி வந்தால் அது கவர்ச்சிதான் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் பிஸி

தமிழில் தடையற தாக்க படத்தில் அறிமுகமாகி புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

மகிழ்ச்சிதான் முக்கியம்

சமீபத்தில் ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் முக்கியம். சந்தோஷம் இல்லாமல் பணம், புகழ் இருந்து எந்த பயனும் இல்லை. உண்மையாக இருப்பதுபோல் போலியாக நடிப்பவர்களை எனக்கு பிடிக்காது. எனது எண்ணங்களில் ஆன்மீக தாக்கம் இருக்கும். வெற்றி, தோல்வி இரண்டும் என்னை பாதிக்காது.

காதல், கவர்ச்சி

முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை. அப்படி வந்தால் அது கவர்ச்சிதான். பழகி ஒருவரை ஒருவர் புரிந்து அதன்பிறகு காதலிப்பதுதான் உண்மையானது. எனக்கு இன்னும் காதல் வரவில்லை. ஒருவேளை நான் காதலிக்கும் நபர் மோசம் செய்தால் அவரை விட்டு விடுவேன். கவர்ச்சி என்பது அழகில் இல்லை. அவர்களுக்குள் இருக்கிற தன்னம்பிக்கையில் வரும்.

சாப்பாட்டு பிரியை

உலகம் முழுவதும் சுற்ற வேண்டும். பல நாட்டு உணவுகளை ருசித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏனெனில் நான் பெரிய சாப்பாட்டு பிரியை. கொரோனா ஊரடங்கினால் நான் நடித்த படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here