உலக குடும்ப தினம்
இன்றைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக சொந்தமான இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் விரிசல் உருவாகிறது. ஒவ்வொருவரும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி மே 15ந் தேதி “சர்வதேச குடும்ப தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வெளியே இருப்பவர்கள் என்னதான் குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை. ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும் எவருக்காகவும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இந்த தினம் வலியுறுத்துகிறது.
நிகழ்வுகள்
1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
1958 – சோவியத்தின் ஸ்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1960 – சோவியத்தின் ஸ்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
1963 – நாசாவின் மேர்க்குரி – அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார்.
1978 – டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது.
1988 – எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கத் தொடங்கினர்.
1991 – ஈடித் கிரெசன் பிரான்சின் முதற்பெண் பிரதமரானார்.
2006 – வவுனியாவில் நார்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.