கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பயன்படுத்தப்படும் முகக்கவசங்களில் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் முகங்களுடன் வித்தியாசமான முறையிலான முகக்கவசங்கள் தயாரிக்கும் பணி மும்முரமடைந்துள்ளது.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்கள் பலர் வருவாயின்றி தவித்து வரும் நிலையில், தொழில்துறையும் மிகுந்த பின்னடைவை சந்தித்துள்ளது.

ஊர் திரும்பிய தொழிலாளர்கள்

ஆயத்த ஆடை தொழிலில் சிறந்து விளங்கும் திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் முடங்கியதால், வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை இல்லாமல் சொந்த ஊர்களுக்கு திரும்பச் சென்றனர்.

மாஸ்க் தயாரிப்பில் அசத்தல்

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் இயங்கும் பின்னலாடை நிறுவனங்கள் 30 சதவிகித பணியாளர்களுடன் வேலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து களத்தில் இறங்கிய பணியாளர்கள் மாஸ்க் தயாரிப்பில் மாஸ் காட்டி வருகின்றனர்.

வரவேற்பு

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களின் முகங்களுடன் வித்தியாசமான முறையில் பிரிண்ட் செய்யப்பட்ட முகக்கவசங்களை தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி வசனங்கள் அடங்கிய முகக்கவசங்களையும் அவர்கள் தயாரித்துள்ளனர். இந்த முகக்கவசங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளால், இதற்கான ஆர்டர்களும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here