வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த பூஜைகளிலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வைகாசி மாத பூஜை

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வைகாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து விளக்கேற்றுகிறார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்பதால் இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

நாளை அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெறும். கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை ஆகியவை நடத்தப்பட்டு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை, அத்தாழ பூஜைக்கு பின் இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். கொரோனா அச்சம் காரணமாக இந்த பூஜைகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.

ஆன்லைன் வழிபாடு

அதே நேரம், www.onlinetdb.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து ஆன்லைன் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here