இரண்டு முறை காதல் வந்தும் திருமணம் வரை சென்று ஏமாந்துவிட்டேன் என கவர்ச்சி நடிகை சோனா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு ரவுண்டு வருபவர் நடிகை சோனா. இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவருக்கு, ரசிகர்கள் மனதில் எப்போதும் ஒரு இடம் உண்டு. சமீபத்தில் நடிகை சோனாவிடம் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

திருமண வாழ்க்கையில் வெறுப்பு

அதற்கு சோனா கூறுகையில், என் வாழ்க்கையில் 2 முறை காதல் வந்தது. ஒருவரை 6 வருடங்களும், இன்னொருவருடன் 7 வருடங்களும் உயிருக்கு உயிராக பழகினேன். அந்த 2 காதலும் தோல்வியில் முடிந்தது. 2 பேருடனும் திருமணம் வரை நெருங்கியும், கடைசி நிமிடத்தில் ஏமாற்றி விட்டார்கள். இதனால் திருமண வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.

முக்கிய கடமை

‘சீக்கிரம் திருமணம் செய்து கொள்’ என நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு 2 கடமைகள் இருப்பதால் அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ஒன்று என் தங்கை திருமணம். இன்னொன்று, ஒன்றுவிட்ட இன்னொரு தங்கையின் திருமணம். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.

சுயசரிதை ரெடி

அதன்பிறகு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்து இருக்கிறேன். நான் எழுதி முடித்த எனது சுயசரிதையில் நிறைய முக்கியமான ரகசியங்கள் உள்ளன. அதை புத்தகமாக வெளியிடுவதற்கு சரியான பதிப்பாளரை தேடி வருகிறேன். ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளியில் எங்கும் போக முடிவதில்லை. நான்கு சுவர்களை பார்த்தபடி, வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன். இப்போதைக்கு அந்த 4 சுவர்கள்தான் என் நண்பர்கள் என சோனா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here