கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நேற்று நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
4-ம் கட்ட ஊரடங்கு
அப்போது, 17ம் தேதிக்கு பிறகு 4வது கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதாக தெரிவித்தார். மேலும் பொருளாதாரத்தை மீட்க ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்களையும் அவர் அறிவித்தார். ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக வலுவடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.
கமல் டுவிட்
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.