சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்க வந்தது எப்படி என்பது குறித்து அவர் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி விளக்கமளித்துள்ளனர்.

கேலி, கிண்டல்

பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து வந்தார். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். இப்போது இவர் குழந்தைகளுடன் மக்களை கவரும் வகையில் சம்மர் ஆஃபர் விளம்பரத்தில் நடித்துள்ளார். அண்ணாச்சியின் விளம்பரங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

கதாநாயகன்!

சின்னத்திரையில் மட்டும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த அண்ணாச்சி, தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்கவிருக்கிறார். ஆம், இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிப்பில் ஆர்வம்

அண்ணாச்சி நடிக்க வந்தது எப்படி என்பது குறித்து இயக்குனர்கள் கூறுகையில், அண்ணாச்சி ஷோரூம் விளம்பரங்கள் எல்லாமே நாங்க தான் எடுத்தோம். அந்த விளம்பரங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்ணாச்சிக்கு ரொம்ப நாளாகவே நடிப்பு ஆசை உண்டு. ஷோரூம் விளம்பரத்துக்கு நடிகரை தேடிக் கொண்டிருந்த போது ‘நானே முயற்சி பண்ணட்டுமா’ என கேட்டு நடித்தார்.

விரைவில் தொடங்கும்

அடுத்தடுத்த விளம்பரங்களுக்கு அவர் கொடுத்த உழைப்புதான், அவர் நடிப்பில் படம் இயக்கலாம் என்ற நம்பிக்கையை எங்களுக்கு கொடுத்தது. அண்ணாச்சி நடிப்பில் உருவாகும் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். 30 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. ஊரடங்கிற்கு பின் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here