கொரோனா ஊரடங்கால் முடங்கி இருந்த சினிமா துறைக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து டப்பிங், எடிட்டிங் போன்ற பணிகள் தொடங்கியுள்ளன.

முடங்கிய திரையுலகம்

கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்பட தொழில் முற்றிலுமாக முடங்கியது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதுடன், தியேட்டர்களும் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்காள் வேலையின்றி தவித்தனர். ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்கு பிந்தைய Post production பணிகளை தொடங்க அனுமதி அளிக்கும்படி அரசுக்கு திரையுலக சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

 

அரசு அனுமதி

இதனை ஏற்ற தமிழக அரசு, மே 11ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய Post production பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை, ஒளிக்கலவை ஆகிய தொழில்நுட்ப பணிகளை தலா 5 பேரை வைத்து மேற்கொள்ளவும், ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்’ மற்றும் ‘விசுவல் கிராபிக்ஸ்’ பணிகளை 10 முதல் 15 பேரை வைத்து நடத்தவும் அறிவுறுத்தியது.

பணிகள் தொடக்கம்

திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி அளித்ததையடுத்து, இந்த தொழில்நுட்ப பணிகள் நேற்று தொடங்கின. கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2, விஷால் நடிக்கும் சக்ரா, திரிஷா நடிக்கும் ராங்கி ஆகிய படங்களின் எடிட்டிங், கபடதாரி மற்றும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தின் டப்பிங் பணிகள் நடந்தன. மேலும், 3 தொலைக்காட்சி தொடர்களின் தொழில்நுட்ப பணிகளும் தொடங்கின. இந்த தகவலை ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார்.

சமூக இடைவெளி

ஸ்டூடியோக்களில் இந்த பணிகள் அனைத்தும் அரசு அறிவுறுத்தல்படி சமூக இடைவெளியுடன் நடந்துள்ளது. இதில் பங்கேற்றவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். இன்று முதல் மேலும் பல படங்களின் தொழில்நுட்ப பணிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here