நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் அதிபரான நாள்

நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

1994 மே 10-ந்தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999-ல் பதவியை விட்டு விலகினார். இவர் 2-வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008-ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பமான நாள்

இந்தியாவில் உள்ள உத்தரபிரதேசம் மாநிலம் மீரட் என்ற இடத்தில் 1857-ம் ஆண்டு மே 10-ந்தேதி முதன் முதலாக சிப்பாய்கள் பிரித்தானிக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இதன்மூலம் இந்திய விடுதலைப்போராட்டம் ஆரம்பமானது.

நிகழ்வுகள்

1810 – ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார்.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6-ல் இறந்தார்.

1871 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.

1877 – ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here