கொரோனா விவகாரம் தமிழ் சினிமாவை புரட்டி போட்டுள்ள நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை 25 சதவீதம் வரை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளர், ஹீரோ
இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்து பின்னர் ஹீரோவாக அவதாரமெடுத்து அதில் வெற்றிகண்ட சிலருள் நடிகர் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், எமன், அண்ணாதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
25% குறைப்பு
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தென்னிந்திய திரையுலகம் பெரிதாக பாதித்திருக்கும் நேரத்தில், இப்படங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு தாமாகவே முன்னவந்து, இந்த படங்களுக்காக தான் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
பாராட்டு
அவரது இந்த செயலின் மூலம் மூன்று பட தயாரிப்பாளர்களும் அவர்களது படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, எந்த பிரச்சனைகளும் இல்லாமல் கூடிய விரைவில் படத்தை வெளியிட முடியும் என நடிகர் விஜய் ஆண்டனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை தயாரிப்பாளர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.