கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

திட்டவட்ட மறுப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஏப்ரல் 9-ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக செய்திகள் பரவின. இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்தது.

விஜய் எதிர்ப்பு?

இந்நிலையில், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மாஸ்டர்’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பிரபல நிறுவனம் அணுகிய போது, ரசிகர்கள் தியேட்டரில் வந்து கொண்டாடுவதற்காக தான் படத்தை எடுத்துள்ளோம், ஓடிடியில் ரிலீஸ் செய்ய அல்ல என விஜய் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

கடும் எதிர்ப்பு

புதிய படங்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களின் எந்த ஒரு படத்தையும் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

ஓடிடியில் ரிலீஸ்

அதேவேலையில், ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள், திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சித்தார்த்தின் டக்கர், சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here