மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் உற்சவர் சன்னதியில் இன்று கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியார்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

திருக்கல்யாண வைபவம்

சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருக்கல்யாணத்தை மட்டும் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி இன்று காலை 9:05 முதல் 9: 30 மணிக்குள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

பக்தர்கள் இல்லை

காலை 9.05 மணி முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் நடந்தது. 4 சிவாச்சாரியார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான www.tnhree.gov.in மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org ஆகியவற்றிலும், கோவில் முகநூல் பக்கம் மற்றும் திருக்கோவில் யூ டியூப் அலைவரிசையிலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

வீட்டிலேயே வழிபட்ட பெண்கள்

காலம், காலமாக நடைபெறும் இந்த திருவிழாவை இந்தாண்டு பெண்கள் நேரில் காண முடியவில்லை. ஆனால் அந்த நிகழ்வை கோவில் நிர்வாகம் நேரடியாக ஒளிபரப்பு  செய்ததால் வீட்டில் இருந்தே பெண்கள் இறைவனை வேண்டி மங்கலநாண் மாற்றிக் கொண்டனர். இதேபோல், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா ரத்தான நிலையில், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் மே 8 ல் நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here