சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக பரவிய வதந்திக்கு நடிகை காஜல் அகர்வால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்களுக்கு பிடித்த விஷங்களை செய்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் ஷாக்

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் பற்றி சமீபத்தில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வந்தது. ஊரடங்கு முடிந்து மீண்டும் ஷூட்டிங் துவங்கும் போது, தான் ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களுக்கு தேதிகள் பிரித்து கொடுப்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். அதனால் ஒரு படத்தில் இருந்து வெளியேறிவிடுவது என முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவியது. சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் வெளியேறவுள்ளார் என செய்திகள் வெளியானது. ஏற்கனவே, திரிஷா அந்த படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது காஜல் அகர்வாலும் வெளியேறிவிட்டாரா என ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

உண்மை இல்லை

இந்த செய்திக்கு காஜல் அகர்வாலின் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. காஜல் அகர்வால் குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் ‘ஆச்சார்யா’ படத்தில் அவர் நிச்சயம் நடிக்கிறார் எனவும் காஜல் அகர்வாலின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார். காஜல் அகர்வால் தமிழில் இந்தியன் 2, பிரிந்தா மாஸ்டர் இயக்குநராக அறிமுகமாகும் படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here