கே. பாலச்சந்திரின் படத்தில் நடிக்காதது தனக்கு மிகப்பெரிய வருத்தம்தான் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
சாதனை நடிகை
திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் நடிகை ராதிகா, தற்போது சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிஸியாக நடித்து வருகிறார். 1980களில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களுடன் ராதிகா பணியாற்றியுள்ளார்.
கேள்விக்கு பதில்
நடிகை ராதிகா இதுவரை கே. பாலச்சந்தரின் படத்தில் நடித்தது இல்லை. அது ஏன் என்பது தெரியாமலேயே இருந்தது. இதுபற்றி ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ராதிகா தற்போது பதில் அளித்துள்ளார்.
சோகம், வருத்தம்
இதுபற்றி பேசுகையில், கே. பாலச்சந்தர் படத்தில் நடிப்பது பற்றி ஒரு சில முறை ஆலோசித்திருக்கிறோம். ஆனால் அவர் எனக்காக அற்புதமான ஒரு கதையை எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை என்பதுதான் சோகம். இதுவரை எனக்கு அது மிகப்பெரிய வருத்தம்தான் எனக் கூறியுள்ளார்.