லாக்டவுனால் வீட்டிலேயே இருக்கும் நடிகை ராசி கண்ணா கிட்டார் இசைத்தவாறு பாட்டு பாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் பதிவிடுள்ளார்.
இளம் நடிகை
தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராசி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களில் நடித்ததை தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிப்பை தவிர பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட ராசி கண்ணா, ஒரு சில தெலுங்கு படங்களில் பாடியுள்ளார்.
இசையில் ஆர்வம்
இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்கும் நடிகை ராசி கண்ணா, கிட்டார் இசைத்துக்கொண்டே பாடல் பாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
அதில், இசை – இதயத்தின் மொழி. கிட்டார் இசைக்க கற்று வருகிறேன். எனக்கு பிடித்த பாடலை வாசிக்கிறேன். எனது இந்த முயற்சி உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார். ராசி கண்ணாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.