ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இன்று காலை பரவலான பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக புகுந்தது. ராஜஸ்தானின் 33 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுப்பு நிகழ்ந்தது கண்டறியப்பட்டது. பொதுவாக இந்த வெட்டுக்கிளி படையெடுப்பானது பாகிஸ்தான் எல்லையையொட்டிய மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை மட்டுமே வரும். ஆனால், இந்த ஆண்டு ஜெய்ப்பூர் வரையிலும், இந்தியாவின் மத்திய பகுதியான மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயம் உள்ளிட்ட பல இடங்களில் வந்திருப்பதும், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. Locust swarms attack என்றழைக்கப்படும் இந்த வெட்டுக்கிளி படையெடுப்பால் தென்னிந்திய பகுதிகளுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என்று வேளாண்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here